Enable Javscript for better performance
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கூடுதல் நீதிமன்றங்கள் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கூடுதல் நீதிமன்றங்கள் திறப்பு

    By DIN  |   Published on : 24th March 2018 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கூடுதல் நீதிமன்றங்களை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வெள்ளிக்கிழமை குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைத்தார்.
    உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 16 நீதிமன்றங்கள் செயல்பட்டு வந்த நிலையில், நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஏதுவாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கூடுதலாக 8 நீதிமன்றங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, புதிய நீதிமன்ற திறப்பு நிகழ்வு 24 ஆவது நீதிமன்றத்தில் நடைபெற்றது. அங்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி குத்துவிளக்கேற்றி புதிய நீதிமன்றங்களை தொடக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அங்கு நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முதல் வழக்கை விசாரித்தனர். புதிய கூடுதல் நீதிமன்றங்களுக்கு விரைவில் நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர். நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.விமலா, பி.என்.பிரகாஷ், வி. பாரதிதாசன், எஸ்.எஸ்.சுந்தர், ஜே.நிஷா பானு, எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.எம். பஷீர் அகமது, ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ராமதிலகம், ஆர்.தாரணி, பி.ராஜமாணிக்கம், டி.கிருஷ்ணவள்ளி, ஆர்.ஹேமலதா மற்றும் வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai