Enable Javscript for better performance
கீழடியில்தான் அதிக பிராமி எழுத்துகள் கண்டறியப்பட்டன: எழுத்தாளர் சு.வெங்கடேசன்- Dinamani

சுடச்சுட

    

    கீழடியில்தான் அதிக பிராமி எழுத்துகள் கண்டறியப்பட்டன: எழுத்தாளர் சு.வெங்கடேசன்

    By DIN  |   Published on : 24th March 2018 04:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழத்தில் கீழடியில்தான் பிராமி எழுத்துக்கள் அதிகம் கண்டறியப்பட்டுள்ளன என்று சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
    மதுரையில் வெற்றித் தமிழர் பேரவை சார்பில் வைகையும் அகழாய்வும் என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.கருத்தரங்குக்கு பேரவையின் மாநில துணைச் செயலர் இரா.செழியன் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப்பொதுச் செயலர் சு.வெங்கடேசன் பேசியது:
    2013-2014-ஆம் ஆண்டு, 257 கி.மீ., நீளம் கொண்ட வைகை நதி துவங்கும் வெள்ளிமலை தொடங்கி ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் வரை ஆய்வு நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 380 கிராமங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 297 கிராமங்களில் தொல்லியல் அடையாளங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
    உலகிலேயே இந்தியாவில் தான் 1.5 லட்சம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் 65 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழி சார்ந்தது. இதில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் 36 இடங்களில் கிடைத்தது. இதில் 24 கல்வெட்டுகள் வைகை நதிக்கரையில் கிடைத்தது. தமிழ்நாட்டில் அகழாய்வில் பானை ஓடுகளில் அதிக பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது கீழடியில்தான். கீழடியில் 5ஆயிரம் பொருள்களும் 80-க்கும் மேற்பட்ட பிராமி எழுத்துக்களும் இருப்பது கண்டறியப்பட்டுளளது. 110 ஏக்கரில் 65 சென்ட் நிலத்தில் மட்டுமே ஆய்வு நடந்துள்ளது.
    இந்த நிலையில் மதவாத சக்திகள் கீழடியை மூடு என்று குரல் கொடுக்கின்றன. வைகைநதியின் கடைசி இடமான அழகன்குளத்தில் (அருகூர் துறைமுகம்) நடத்தப்பட்ட அகழாய்வில் மிகப்பெரிய துறைமுகம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள பானை ஓட்டில் கிரேக்க நாட்டின் கப்பல் வரையப்பட்டிருந்தது. இது கிரேக்க நாட்டிற்கும் தமிழகத்திற்கும் இருந்த வர்த்தகத்தொடர்பை நமக்கு உணர்த்துகிறது என்றார்.
    கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநகர் மாவட்டச் செயலர் இரா.விஜயராஜன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai