Enable Javscript for better performance
சசிகலா புஷ்பா எம்.பி. திருமண சர்ச்சை: மனைவி புகாரின்பேரில் ராமசாமி மீது வழக்குப்பதிவு- Dinamani

சுடச்சுட

    

    சசிகலா புஷ்பா எம்.பி. திருமண சர்ச்சை: மனைவி புகாரின்பேரில் ராமசாமி மீது வழக்குப்பதிவு

    By DIN  |   Published on : 24th March 2018 02:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி, திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்படும் ராமசாமி மீது அவரது மனைவி அளித்தப் புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி. தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு ஓரியண்டல் பல்கலைக்கழக துணைவேந்தரான ராமசாமியை திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மதுரை புதுமாகாளிப்பட்டியைச் சேர்ந்த சத்யபிரியா மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில நாள்களுக்கு முன்பு புகார் அளித்தார்.
    அதில் ஓரியண்டல் பல்கலைக்கழக துணைவேந்தர் என்று கூறிக்கொள்ளும் ராமசாமி தன்னுடைய கணவர் என்றும், நீதிபதி என்று ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும், பெண் குழந்தை பிறந்த பிறகு தன்னை விட்டுச்சென்று விட்டார் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் கணவர் ராமசாமி மற்றும் அவரது சகோதரிகள் செல்வி, பாரதி ஆகியோர் வரதட்சிணை கொடுமை செய்வதாக திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். புகாருக்கு ஆதாரமாக ராமசாமியுடன் திருமணம் நடந்தபோது எடுத்த புகைப்படத்தையும் வழங்கினார்.
    இந்நிலையில் சத்யபிரியா அளித்தப் புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சட்ட ஆலோசனை மையத்துக்கும் புகார் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து சத்யப்பிரியா புகாரின்மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கணவர் ராமசாமி, அவரது சகோதரிகள் செல்வி, பாரதி ஆகிய மூவர் மீதும் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸார், 3 பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai