Enable Javscript for better performance
சுகாதாரமான உணவு வழங்கக்கோரி அரசு விடுதி மாணவர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சுகாதாரமான உணவு வழங்கக்கோரி அரசு விடுதி மாணவர்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 24th March 2018 02:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை சாத்தமங்கலம் பகுதியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர்கள் விடுதி உள்ளது. இங்கு பல்வேறு கல்லூரிகளில் பயிலும் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். விடுதியில் அரசு சார்பில் சமையலர் நியமிக்கப்பட்டு விடுதியிலேயே சமைக்கப்பட்டு உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில் விடுதியில் வழங்கப்படும் உணவு சுகாதாரமின்றியும், சாப்பிட முடியாதபடி உள்ளதாகவும், விடுதியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லையென்றும் கூறி விடுதி மாணவர்கள் வெள்ளிக்கிழமை இரவு அப்பகுதியில் சாலை மறியலுக்கு முயன்றனர். இதையடுத்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து விடுதி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தகவலின்பேரில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சித்ராதேவி மற்றும் அதிகாரிகள் விடுதிக்குச்சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து 3 மணி நேர உள்ளிருப்பு போராட்டத்தை மாணவர்கள் விலக்கிக்கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai