Enable Javscript for better performance
தண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா நாளை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா நாளை தொடக்கம்

    By DIN  |   Published on : 24th March 2018 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை நேதாஜி சாலையில் உள்ள தண்டாயுதபாணி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 25)பங்குனி உத்திரப் பெருவிழா தொடங்குகிறது. வரும் 31 ஆம் தேதி சனிக்கிழமை வரை திருவிழா நடைபெறுகிறது.
    இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரி செள.சக்கரையம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை நேதாஜி சாலையில் உள்ள தண்டாயுதபாணி கோயிலில் வரும் 25 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணிக்கு தங்கக்கவச சாத்துப்படியுடன் பங்குனி உத்திரம் தொடங்குகிறது.
    மாலை 4 மணிக்கு பூக்கூடாரம், சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு மேல் 216 திருவிளக்குப் பூஜை நடைபெறும்.
    வரும் 27 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு கோயிலில் மூலவருக்கு நேர்த்திக்கடன் பால்குடம் அபிஷேகம் நடைபெறும். மேலும் காவடி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாத் தொடங்கி 7 நாள்களும் காலை 5 மணிக்கு ஸ்கந்தஹோமம் தொடங்கி வழக்கமான பூஜைகளும், மாலையில் பூக்கூடாரம், தங்கக்கவச சாத்துப்படி ஆகியவையும் நடைபெறும்.
    பங்குனி உத்திரமான 30 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு ஸ்கந்த ஹோமத்தைத் தொடர்ந்து மூலவருக்கு ருத்ரஜெபம், விஷேச ஆராதனைகள் நடைபெறும். இரவு 7 மணிக்கு மின் விளக்கு அலங்காரபூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிப்பார்.
    விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக வரும் 31 ஆம் தேதி (சனிக்கிழமை) பகலில் அன்னதானம் நடைபெறும்.
    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் கே.ராஜூ உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai