Enable Javscript for better performance
மகாவீரர் ஜயந்தி: மார்ச் 29-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை- Dinamani

சுடச்சுட

    

    மகாவீரர் ஜயந்தி: மார்ச் 29-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை

    By DIN  |   Published on : 24th March 2018 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகாவீரர் ஜயந்தியையொட்டி மதுரை மாநகரப் பகுதியில் மார்ச் 29-ஆம் தேதி ஆடு, மாடு இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
    இது குறித்து மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
    மகாவீரர் ஜயந்தி தினத்தன்று ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்யக் கூடாது.
    இந்த உத்தரவை மீறி உயிரினங்களை வதை செய்தாலோ, இறைச்சிக் கடைகளைத் திறந்து வைத்திருந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai