Enable Javscript for better performance
மதுரை விமான நிலைய பாதுகாப்பை பலப்படுத்த முடிவு- Dinamani

சுடச்சுட

    

    மது ரை விமான நிலைய பாதுகாப்பை பலப்படுத்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    திருச்சி விமான நிலையத்திற்கு இணைய தளத்தின் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, மதுரை விமான நிலையத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில், விமான நிலைய இயக்குநர் வி.வி.ராவ் தலைமை வகித்தார். மத்திய தொழில் பாதுகாப்புப்படை துணை ஆணையர் எம்.என்.ஷா, பெருங்குடி காவல் ஆய்வாளர் ரகுபதி ராஜா, தீயணைப்பு துறையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்களின் அலுவலர்கள் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். காலை 9.30 மணிக்கு தொடங்கி சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், விமான நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai