Enable Javscript for better performance
இருசக்கர வாகன விபத்து: தனியார் நிறுவன ஊழியர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் பலத்த காயமடைந்த தனியார் நிறுவன ஊழியர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தார்.
    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரியைச் சேர்ந்த கருப்பன் மகன் பழனிக்குமார்(35). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், வியாழக்கிழமை இரவு மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் தனிச்சியம் பிரிவு வழியாக வந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி சென்றார். இரு சக்கர வாகனம் சின்ன இலந்தைகுளம் பகுதியில் சென்றபோது அவ்வழியாக வந்த கார், வாகனம் மீது மோதியது. இதில் வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த பழனிகுமார் பலத்த காயமடைந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிகுமார் இறந்தார்.
    சம்பவம் தொடர்பாக பழனிகுமார் மனைவி லட்சுமி அளித்தப் புகாரின்பேரில் அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai