Enable Javscript for better performance
தந்தை, மகளுக்கு கத்திக்குத்து: தம்பதி, மகன் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருமங்கலம் அருகே தந்தை, மகளை கத்தியால் குத்திய தம்பதி மற்றும் அவர்களது மகனை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
       திருமங்கலத்தை அடுத்த பாரப்பட்டியைச் சேர்ந்தவர் இருளாண்டி(44). அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). புதன்கிழமை இருளாண்டியின் தோட்டத்திற்கு செல்லும் பாதையில் மின் கம்பி அறுந்து கிடந்ததாம்.இது குறித்து இருளாண்டி ராஜேந்திரனிடம் கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருளாண்டியை கத்தியால் குத்தினராம். தடுக்கச் சென்ற இருளாண்டியின் மகள் ஈஸ்வரிக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் பலத்த காயமுற்ற இருவரும்  உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்தப் புகாரின்பேரில் சிந்துபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன்(50), அவரது மனைவி அருளாச்சி(40), செல்லபாண்டி(20)ஆகிய மூவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai