Enable Javscript for better performance
தாக்கப்பட்ட பாஜக நிர்வாகிக்கு மத்திய அமைச்சர் ஆறுதல்- Dinamani

சுடச்சுட

    

    தாக்கப்பட்ட பாஜக நிர்வாகிக்கு மத்திய அமைச்சர் ஆறுதல்

    By DIN  |   Published on : 31st March 2018 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மர்ம நபர்கள் தாக்கியதில் பலத்த காயத்துடன் மதுரை மருத்துமவனையில் சிகிச்சை பெறும் ராமநாதபுரம் பாஜக நிர்வாகியை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார். 
     ராமநாதபுரம் மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் வீரபாகு, அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்தார். மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். 
     இந்நிலையில் மருத்துவமனையில் வீரபாகுவை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது: 
     பாஜக-வினர் மீது நடத்தப்படும் தாக்குதலை துரதிர்ஷ்டவசமாக எந்த அரசியல் கட்சியும் பெரிய அளவில் எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருந்தால் தமிழகத்தின் அமைதிக்கு நல்லதல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகம் மற்றும் தமிழர்களின் முன்னேற்றத்துக்காக பாஜக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. அரசியல் ரீதியாக விமர்சனங்களை, கருத்து வேறுபாடுகளை, அரசியல் ரீதியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும். அதற்கு பாஜக தயாராகவே உள்ளது. பாஜகவினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. இதுபோன்ற கொடூரமான தாக்குதல்களில் ஈடுபடுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai