Enable Javscript for better performance
திருப்பரங்குன்றத்தில் பங்குனி உத்திரத் திருவிழா: தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி வலம்- Dinamani

சுடச்சுட

    

    திருப்பரங்குன்றத்தில் பங்குனி உத்திரத் திருவிழா: தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி வலம்

    By DIN  |   Published on : 31st March 2018 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர விழாவில் வெள்ளிக்கிழமை தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி வலம் வந்து அருள்பாலித்தார்.
       இத்திருக்கோயில் பங்குனிப் பெருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவினையொட்டி தினமும் சுவாமி தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
    விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
    இதையொட்டி காலை முதல் பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து காவடி எடுத்து வந்து அரோகரா கோஷத்துடன் சுவாமியை வழிபட்டனர். முன்னதாக உற்சவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. அதை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கப் பல்லக்கிலும், மாலையில் தங்கக் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai