Enable Javscript for better performance
புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை- Dinamani

சுடச்சுட

    

    புனித வெள்ளியை முன்னிட்டு மதுரையில் உள்ள தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
     இயேசு கிறிஸ்து கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கிறிஸ்தவ மக்களால் கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி மதுரையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதாக தனது சீடர்களின் பாதங்களைக் கழுவி முத்தமிட்டதை நினைவுகூறும் வகையில், தேவாலயங்களில் முதியோர்களின் பாதங்களைக் கழுவும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.  இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை ஆலயப் பங்குத் தந்தையர் திருப்பலி நடத்தினர். நற்கருணை வழங்குதல், சிலுவைப்பாடு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் இயேசு கிறிஸ்துவுக்கு தண்டனை அளிக்கப்பட்டதில் இருந்து கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வு வரை நாடகமாக அரங்கேற்றப்பட்டது. புனித மரியன்னை தேவாலயத்தில் நடைபெற்ற இந்த சிலுவைப்பாடு நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். ஞானஒளிவுபுரம் புனித வளனார் தேவாலயம், கோ.புதூர் லூர்து அன்னை தேவாலயம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும்  சிறப்பு  பிரார்த்தனை நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai