Enable Javscript for better performance
பூட்டிய வீட்டில் 8 பவுன் நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து 8 பவுன் நகை மற்றும் செல்லிடப்பேசிகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
     மதுரை வளர்நகர் மீனாட்சி அவென்யூ பகுதியைச் சேர்ந்த காசி மகன் சுப்ரமணியன்(22). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 
    இவரது தந்தை காசிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை சிகிச்சைக்காக சென்னைக்கு மார்ச் 23-ஆம் தேதி அழைத்துச்சென்றுள்ளார். சிகிச்சை முடிந்து வியாழக்கிழமை இரவு வீடு திரும்பியுள்ளனர். 
     அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் பீரோவில் இருந்த 8 பவுன் நகை, வெள்ளி பொருள்கள், 3 செல்லிடப்பேசிகள் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது.
     சம்பவம் தொடர்பாக சுப்ரமணியன் அளித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai