Enable Javscript for better performance
பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    மதுரை அருகே செல்லிடப்பேசி மூலம் நண்பர்களுடன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
      மதுரை அருகே உள்ள காதக்கிணறு அசோக்நகரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி . இவரது மகள் நித்யா(17). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் செல்லிடப்பேசி மூலம் நித்யா நண்பர்களுடன் பேசியுள்ளார். 
       இதை பெற்றோர் கண்டித்து தேர்வுக்கு படிக்குமாறு கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த நித்யா வீட்டில் பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 
      சம்பவம் தொடர்பாக பாலசுப்ரமணி அளித்த புகாரின்பேரில் அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai