Enable Javscript for better performance
மின்கம்பி உரசி தீ: எரிவாயு உருளை லாரி சேதம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை காலி எரிவாயு உருளைகள் ஏற்றிவந்த லாரி மின் கம்பி உரசியதில் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. 
        தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் உள்ள பெட்ரோல் நிறுவனத்திற்கு காலி எரிவாயு உருளைகளை ஏற்றிய லாரி வெள்ளிக்கிழமை வந்தது. லாரியை மதுரை மாவட்டம் சாப்டூர் சங்கரலிங்காபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (35) ஓட்டி வந்தார். கப்பலூர் அருகே சொக்கநாதன்பட்டி வாகன காப்பகம் அருகே உயர்மின் அழுத்த மின் கம்பி உரசியதில் லாரி தீப்பற்றி எரிந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரியத் துறையினர் மின் இனைப்பைத் துண்டித்தனர், மதுரை தீயணைப்பு நிலைய வீரர்கள் லாரியில் பற்றிய தீயை அணைத்தனர். விபத்தில் லாரி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. லாரியில் காலி எரிவாயு உருளைகள் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கப்பலூர், பரம்புப்பட்டி உள்ளிட்ட சில கிராமங்களில் சுமார் 3 மணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தீ விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai