Enable Javscript for better performance
கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிபெருந்திருவிழா: மே 21 இல் கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி பெருந்திருவிழா: மே 21 இல் கொடியேற்றம்

    By DIN  |   Published on : 18th May 2018 06:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா கொடியேற்றம் மே 21 ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.
        மதுரையில் உள்ள பழமையான வைணவத்தலங்களில் கூடலழகர் பெருமாள் கோயில் முக்கியமானதாகும். இந்தக்கோயிலின் நடப்பாண்டுக்கான வைகாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு  (மே 20) விஷ்வக்சேனர் புறப்பாடு, அங்குரார்ப்பணம் நடைபெறும். 
    இதையடுத்து 21 ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் 10.25 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. அன்று இரவு பெருமாள் அன்னவாகனத்தில் வலம் வந்து அருள்பாலிக்கிறார்.
     விழாவின் இரண்டாம் நாளான மே 22 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை திருப்பல்லக்கும், இரவில் சிம்ம வாகனத்தில்  அருள்பாலிப்பும் நடைபெறுகிறது. புதன்கிழமை இரவு அனுமார் வாகனத்திலும், வியாழக்கிழமை இரவு கெருட வாகனத்திலும் பெருமாள் அருள்பாலிக்கிறார். 
     வெள்ளிக்கிழமை (மே 25) இரவு ஷேச வாகனத்திலும், சனிக்கிழமை இரவு யானை வாகனத்திலும் அருள்பாலிக்கிறார். அன்று  காலை கோயிலில் இருந்து பழங்காநத்தம் கோனார் மண்டபத்திற்கு புறப்பாடாகும் சுவாமி, இரவில் யானை வாகனத்தில் கோயிலில் எழுந்தருள்வார். 
    அன்று ஆண்டாள் மண்டபத்தில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
     ஏழாம் திருநாளான மே 27 ஆம் தேதி காலை பெருமாள் உபயநாச்சியருடன் தங்கச்சிவிகையில் எழுந்தருள்கிறார். இரவில் பூச்சப்பரம் நடைபெறுகிறது.
      மே 28 ஆம் தேதி  காலை திருப்பல்லக்கும், இரவு குதிரைவாகனத்தில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். ஒன்பதாம் நாளான மே 29 ஆம் தேதி காலையில்  பெருமாள் நாச்சியாருடன் எழுந்தருளியதும்,   தேரோட்டம் நடைபெறுகிறது.  பாண்டிய வேளாளர் தெரு, தெற்கு மாரட் வீதி, கிரைம்பிராஞ்ச் வழியாக, நேதாஜி சாலை, மேலமாசி வீதிகளில் திருத்தேர் வலம் வருகிறது. 
     பத்தாம் திருநாளான மே 30 காலை திருப்பல்லாக்கும், மாலையில் அலங்காரத் திருமஞ்சனமும், இரவில் எடுப்புச் சப்பரம், சப்தாவரணம், திருத்தேர் தடம் பார்த்தல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. வியாழக்கிழமை (மே 31) பெருமாள் மேலமாசி வீதி, வக்கீல் புதுத்தெரு வழியாக எழுந்தருளி வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். பின்னர் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிலையில், இரவில் தசாவதாரம் நடைபெறுகிறது. 
     பனிரெண்டாம் திருவிழாவாக ஜூன் 1 ஆம் தேதி காலை கெருட வாகனத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் பெருமாள் எழுந்தருள்கிறார். 
    ஜூன் 2 இல் விடையாற்றி உற்சவம், ஜூன் 3 இல் உற்சவ சாந்தி, ஆஸ்தானம் எழுந்தருளல் ஆகிய பூஜைகளுடன் விழா நிறைவடைகிறது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai