Enable Javscript for better performance
செயலரை பணி நீக்கம் செய்யக் கோரி கூட்டுறவு கடன் சங்கம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    செயலரை பணி நீக்கம் செய்யக் கோரி கூட்டுறவு கடன் சங்கம் முற்றுகை

    By DIN  |   Published on : 18th May 2018 06:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உசிலம்பட்டி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளரை பணி நீக்கம் செய்யக்கோரி சங்க அலுவலகத்தை  உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 
        உசிலம்பட்டி அருகேயுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ஆக இருப்பவர் ஜெயபாண்டியன். இவர் சங்கத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து உள்ளதாகவும் அவரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரி உயர் அதிகாரிகளிடம் பொதுமக்கள் சார்பில் பல்வேறு மனுக்கள் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். 
      இதனால் சங்க உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கடன்சங்க அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட முற்பட்டனர். தகவல் அறிந்து வந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். 
     மேலும் உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர்.   இதையடுத்து  உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்த முடிவு செய்து கலைந்து சென்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai