Enable Javscript for better performance
செல்லிடப்பேசி கோபுரத்தில்  திருடப்பட்ட15 பேட்டரிகள் மீட்பு: இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    செல்லிடப்பேசி கோபுரத்தில்  திருடப்பட்ட 15 பேட்டரிகள் மீட்பு: இருவர் கைது

    By DIN  |   Published on : 18th May 2018 06:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அழகர்கோவில் அருகே செல்லிடப்பேசி கோபுரத்தில் பேட்டரிகள் திருடப்பட்டது தொடர்பாக  தஞ்சாவூரைச் சேர்ந்த இருவரை  போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 பேட்டரிகளை மீட்டனர்.
    அழகர்கோவில் அருகே தனியார் செல்லிடப்பேசி  நிறுவனத்துக்குச் சொந்தமான செல்லிடப்பேசி கோபுரம் உள்ளது. இதனருகே உள்ள மின் கட்டுப்பாட்டு அறையில் பேட்டரிகள் வைக்கப்பட்டிருந்தன. கடந்த 10 நாள்களுக்கு முன்னர், இங்கிருந்த பேட்டரிகளை மர்ம நபர்கள்  திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து, செல்லிடப்பேசி கோபுர நிர்வாகி ரவிச்சந்திரன் மேலவளவு போலீஸில் புகார்செய்தார்.  இந்நிலையில் தஞ்சாவூர் அருகே செல்லிடப்பேசி  கோபுரங்களில் பேட்டரிகள் திருடிய தியாகராஜன், செல்வமூர்த்தி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.  அவர்கள் மறைத்து வைத்திருந்த 15 பேட்டரிகளையும் போலீஸார் கைப்பற்றினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai