Enable Javscript for better performance
திருமங்கலத்தில் காங். செயல்வீரர்கள் கூட்டம்: திருநாவுக்கரசர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    திருமங்கலத்தில் காங். செயல்வீரர்கள் கூட்டம்: திருநாவுக்கரசர் பங்கேற்பு

    By DIN  |   Published on : 18th May 2018 06:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வியாழக்கிழமை செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட தலைவர் ஆர்.ஜெயராமன் தலைமை வகித்தார். நகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் பங்கேற்று பேசியது:    
       இந்தியாவில் நடிகர்கள் பலர் கட்சி ஆரம்பித்தனர். ஆனால் எம்.ஜி.ஆர், என்.டி.ராமாராவ் ஆகிய இருவர் மட்டுமே அரசியலில் வெற்றி கண்டனர். பலர்  தோற்றுவிட்டனர். நடிகர்கள் வெற்றிபெறுவதை முடிவு செய்வது மக்கள் தான். அவர்களை மக்கள் ஏற்பதும், நிராகரிப்பதும் தேர்தல் வந்தால்தான் தெரியும். இந்தியாவில் 3 ஆவது அணி என்பது கிடையாது. அப்படியே 3 ஆவது அணி உருவானாலும் அது நிலைக்காது. நிலைத்தாலும் ஆட்சிக்கு வராது. வந்தால் 5 ஆண்டுகள் அந்த ஆட்சி நிலைக்காது என்றார்.   
      பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  
    கர்நாடகத்தில் எடியூரப்பாவை முதல்வர் பதவியில் ஆளுநர் அமர வைத்துள்ளார். பெரும்பான்மை இல்லாத இந்த ஆட்சி ஒரு போதும் நிலைக்காது. விரைவில் கவிழ்ந்துவிடும். பிரதமர் நரேந்திரமோடி அல்ல யார் வந்தாலும் காங்கிரஸ் இல்லாத தேசத்தை உருவாக்க முடியாது.
     காங்கிரஸ் கட்சியை யாராலும் அழிக்க முடியாது. பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழக காவல்துறை கைது செய்ய முடியாமல் பரிதவிப்பது அவர்களின் பலகீனத்தைக் காட்டுகிறது என்றார்.  ஆர்ப்பாட்டத்தில் நகர் மாவட்டத்தலைவர் தாமோதரன் வரவேற்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai