Enable Javscript for better performance
தோட்டத்தில் எலிக்கு வைத்த விஷத்தை தின்று 13 மயில்கள் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தோட்டத்தில் எலிக்கு வைத்த விஷத்தை தின்று 13 மயில்கள் சாவு

    By DIN  |   Published on : 18th May 2018 06:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தோட்டத்தில்  எலிக்காக வைக்கப்பட்ட விஷம் கலந்த அரிசியை தின்ற 13 மயில்கள் வியாழக்கிழமை இறந்தன. 
     மதுரை மாவட்டம் சமயநல்லூரை அடுத்த தேனூர் கண்மாயில்  மடை அருகே 13 மயில்கள் வியாழக்கிழமை இறந்து கிடந்தன.  இதைப் பார்த்த பொதுமக்கள் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
      சம்பவ இடத்துக்குச்சென்று வனத்துறையினர் விசாரணை நடத்தியதில், கண்மாய்க்கு அருகே உள்ள வயலில் நெற்பயிர் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் பயிர்களைப் பாதுகாக்க நிலத்தின் உரிமையாளர் செல்லம், எலிக்கு வைக்கக் கூடிய குருணை மருந்தை அரிசியோடு கலந்து வைத்திருந்தது தெரிய வந்தது. 
     இதையடுத்து இறந்த மயில்கள் உடற்கூறு பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டன. சம்பவம் தொடர்பாக வனத்துறையினர்  கூறும்போது, நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.   உடற்கூறு பரிசோதனையில் நிலத்தில் வைக்கப்பட்டிருந்த குருணை மருந்தால் மயில்கள் இறந்தது தெரியவந்தால் நில உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய பறவையான மயிலை வேட்டையாடுவது, விஷம் வைத்து கொல்வது தண்டனைக்குரிய குற்றம். இதில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai