Enable Javscript for better performance
நாடாளுமன்ற குழு மதுரை வருகை- Dinamani

சுடச்சுட

    

    மகளிர் அதிகாரமளித்தலுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மதுரையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை கலந்துரையாடினர்.
    மகளிர் அதிகாரமளித்தலுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் பிஜோயா சக்கரவர்த்தி தலைமையில் உறுப்பினர்கள் அஞ்சுபாலா,  ரேணுகா புட்டா, ரமாதேவி, ஜோதி துர்வே, பூனம்பென், ஜெயஸ்ரீபென் படேல்,  ரித்தி பத்தக், மால ராஜ்யலெட்சுமி, ஆர்.வனரோஜா, காகசன் பர்வீன், சதாப்தி ராய், ரிட்டா தராய் ஆகியோர் வியாழக்கிழமை மதுரை வந்தனர்.
     மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், மற்றும் வங்கி அதிகாரிகள், மகளிர் திட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். மகளிர் மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆட்சியர் விளக்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai