Enable Javscript for better performance
பழனி கோயில் சிலை மோசடி வழக்கு: அறநிலையத்துறை முன்னாள் ஆணையரை கைது செய்ய இடைக்காலத் தடை- Dinamani

சுடச்சுட

    

    பழனி கோயில் சிலை மோசடி வழக்கு: அறநிலையத்துறை முன்னாள் ஆணையரை கைது செய்ய இடைக்காலத் தடை

    By DIN  |   Published on : 18th May 2018 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சிலை முறைகேடு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலை ஒரு வாரத்துக்கு கைது செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத்  தடைவிதித்தது.
        பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 2004 ஆம் ஆண்டு சிலை செய்வதில் நடந்த முறைகேடு தொடர்பாக  சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஸ்தபதி முத்தையா, இந்து அறநிலைய துறை முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா ஆகியோர்  ஏற்கெனவே  கைது செய்யப்பட்டனர். பழனி கோயில் முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி, தங்க நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன் ஆகியோரை  அண்மையில் கைது செய்துள்ளனர். 
       இந்நிலையில்,  இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், பழனி கோயில் சிலை முறைகேடு வழக்கில் என்னையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.  எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 
       இந்த மனு நீதிபதி எம்.ரமேஷ் முன்பு வியாழக்கிழமை  விசாரணைக்கு வந்தது.  அப்போது அரசுத் தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலை ஒரு வாரத்துக்கு  கைது செய்ய இடைக்காலத் தடைவிதித்தார். விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai