Enable Javscript for better performance
மதுரையில் பொலிவுறு நகர்த்திட்ட பணிகள் விரைவில் தொடங்கும்: மாநகராட்சி ஆணையர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் பொலிவுறு நகர்த்திட்ட  பணிகள் விரைவில் தொடங்கும்: மாநகராட்சி ஆணையர் தகவல்

    By DIN  |   Published on : 18th May 2018 06:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் பொலிவுறு நகர்த்திட்டப் பணிகள் விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் தெரிவித்தார்.
      மதுரையில் பொலிவுறு நகர்த்திட்டப் பணிகள் மற்றும் அம்ரூத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் குடிநீர் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. 
       கூட்டத்தில் பங்கேற்ற மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் அதுகுறித்து வியாழக்கிழமை கூறியதாவது:  மதுரையில் சாலை மேம்பாடு மற்றும் பூங்காக்களை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கி நடந்துவருகின்றன. பொலிவுறு நகர்த்திட்டப் பணிகள் ஓரிரு வாரங்களில் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் குன்னத்தூர் சத்திரம் கட்டுதல் மற்றும் வைகை ஆற்றோரப் பூங்காக்கள் அமைத்தல் ஆகிய பணிகள் முதல் கட்டமாகத் தொடங்கப்படவுள்ளன.
     பொலிவுறுநகர்த் திட்டத்தில் வண்டியூர் கண்மாயில் நிரந்தரமாக நீர் தேக்கவும், அதில் படகு போக்குவரத்து தொடங்கவும் ஆலோசனை நடைபெற்றது. அதற்கான திட்டங்களும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன. 
     அம்ரூத் திட்டத்தின் கீழ் மதுரைக்கான சிறப்புக் குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. 
     அதன்படி ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்தபடி,  முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு நேரடியாக குடிநீர் கொண்டு வரும் திட்டத்துக்கான பணிகளைத் தொடங்குவதற்குரிய அரசு அனுமதி விரைவில் கிடைக்கும். 
     நடப்பாண்டுக்கான தூய்மை இந்தியா திட்ட பட்டியலில் தமிழக மாநகராட்சிகள், நகரங்கள் இடம் பெறவில்லை. 
    சிறப்பிட  பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், மேலும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டால் அதில் மதுரை இடம் பெறுகிறதா? என்பதை பார்க்கவேண்டும். நகரில் பொதுவாக குடிநீர், கழிவுகள் அகற்றுதல் என பல பணிகள் சிறப்பாகவே செயல்படுத்தப்பட்டுவருகிறது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai