Enable Javscript for better performance
மதுரையில் மே 21-இல் ரஷ்ய கல்விக் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் வரும் 21 ஆம் தேதி (திங்கள்கிழமை) ரஷ்யக் கல்விக் கண்காட்சி நடைபெறுகிறது என ஸ்டடி அப்ராட் நிறுவன மேலாண் இயக்குநர் ரவிச்சந்திரன் கூறினார்.
     மதுரையில் வியாழக்கிழமை  அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் ஹோட்டல் ராயல்கோர்ட்டில் வரும் 21 ஆம் தேதி ரஷ்ய கல்விக் கண்காட்சி நடைபெறுகிறது. மருத்துவம், பொறியியல் கல்வியைக் கற்பிக்கும் பத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய முன்னணி அரசு கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இலவசமாக அனுமதிக்கப்படும் இக்கண்காட்சியானது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
     ரஷ்ய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு சி.இ.டி.,  ஐ.இ.எல்.டி.எஸ். போன்ற முன்தகுதி தேர்வுகள் எதையும் மாணவர்கள் எழுதத் தேவையில்லை. இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிப்படி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மருத்துவம் படிக்க விரும்புவோர் நீட் தேர்வு எழுதி தேறியிருக்க வேண்டும். வெளிநாடுகளில் 2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் மருத்துவப் படிப்பில் சேர்ந்து தற்போது அதற்கான முன் தயாரிப்பு படிப்புகளில் உள்ளவர்களுக்கு மருத்துவக் கவுன்சில் நடப்பாண்டில் விலக்கு அளித்துள்ளது.
     ரஷ்யாவில் இளநிலை, நிறைநிலை படிப்புகளில் சேர குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் தேவை. எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறைந்தபட்சம் 40 சதவிகித மதிப்பெண் பெற்றிருத்தல் அவசியம். தமிழ் வழி பயின்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9282221221 என்ற செல்லிடப் பேசியில் தொடர்புகொள்ளலாம் என்றார். தென்னிந்திய ரஷ்ய கூட்டமைப்பு தூதரக கலாசாரத் துணைத் தூதர் மிகைல் ஜே.கோர்பட்டோவ் கூறுகையில், விண்வெளி ஆய்வு, பொறியியல், தொழில்நுட்பம், உயிர்வேதியியல், மருத்துவம் ஆகிய துறைகளில் புலமைமிக்கவர்கள் உலக அளவில் தேவைப்படுகிறார்கள். அத்தகைய கல்வியை பெறுவதற்கு ரஷ்யா சிறந்த இடமாகும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai