Enable Javscript for better performance
ரயில் பயணிகளுக்கான செல்லிடப்பேசி செயலி அறிமுகம்- Dinamani

சுடச்சுட

    

    ரயில் பயணிகளின் வசதிக்காக மதுரை ரயில் (M​a‌d‌u‌r​a‌i Ra‌i‌l)) என்ற செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
     ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசியில் கூகுள் பிளே ஸ்டாரில் இருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  இந்த செயலியின் மூலமாக மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், மதுரை நகரின் சுற்றுலா தலங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். 
     மேலும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணச் சீட்டின் தற்போதைய நிலவரம்,  ரயில் எங்கே வந்து கொண்டிருக்கிறது என்ற விவரம், பயணிகள் உதவிக்கான தொலைபேசி எண்கள் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.  
    தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai