Enable Javscript for better performance
வங்கி ஊழியரிடம் வழிப்பறி: இலங்கை அகதி உள்பட இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வங்கி ஊழியரிடம் வழிப்பறி: இலங்கை அகதி உள்பட இருவர் கைது

    By DIN  |   Published on : 18th May 2018 06:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பரங்குன்றத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த வங்கி ஊழியரிடம் செல்லிடப்பேசி, நகை பறித்த இலங்கை அகதி உள்ளிட்ட இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.   
     திருப்பரங்குன்றம் மூட்டா காலனியைச் சேர்ந்தவர் ராஜேஷ்(40). தனியார் வங்கி ஊழியரான இவர் வியாழக்கிழமை காலை பசுமலை அருகே நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த இரண்டரை சவரன் சங்கிலி மற்றும் செல்லிடப்பேசி யை பறித்து விட்டு சென்றுவிட்டனர். 
     அதேசமயம் அவ்வழியே சென்ற ரோந்து வாகனத்தில் வந்த போலீஸார் அன்புசெல்வம், விஜயகுமார் ஆகியோரிடம் ராஜேஷ் இது குறித்து தெரிவித்தார்.  இதையடுத்து அவர்கள் உடனடியாக பசுமலையில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கிருந்த காவலர் அண்ணாதுரை தலைமையிலான போலீஸார் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் ஆனையூர் இலங்கை அகதி முகாம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்(19), சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த மனோஜ்குமார்(20) ஆகியோர் எனத்தெரிந்தது. அவர்களிடமிருந்து இரண்டரை சவரன் நகை, 6 செல்லிடப்பேசிகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
     இதேபோல வியாழக்கிழமை காலை திருப்பரங்குன்றம் நகராட்சியின் முன்னாள் தலைவர் கோ.சம்பத் திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது  இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கத்தியைக்காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்லிடப்பேசியை பறித்துக்கொண்டு சென்றுவிட்டனராம். இதுகுறித்தும் திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடிவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai