வீரமாமுனிவர் பிறந்த நாள் விழா

கிறிஸ்தவ தத்துவப் போதகரும், தமிழ் அறிஞருமான வீரமாமுனிவரின் 339 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு

கிறிஸ்தவ தத்துவப் போதகரும், தமிழ் அறிஞருமான வீரமாமுனிவரின் 339 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை- திண்டுக்கல் சாலையில் உள்ள அவரது சிலைக்கு வீரமாமுனிவர் அறக்கட்டளை சார்பில் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
 இந்நிகழ்ச்சிக்கு ஞானஒளிவுபுரம் புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி தாளாளர் அ.சேவியர்ராஜ் அடிகளார், அதிபர்தந்தை மரியநாதன், அருள்தந்தை சேசுநேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் அ.லூயிஸ்அமல்ராஜ், கூடுதல் உதவித் தலைமை ஆசிரியர் தே.மரியஅருள்செல்வம், உதவித் தலைமை ஆசிரியர் ச.ஜோசப், கூடுதல் உதவித் தலைமை ஆசிரியர் எம்.குழந்தைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஆ.யாகப்பன், தூய 
மரியன்னை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இ.டோமினிக்சாவியோ, ஆசிரியர் சங்கச் செயலர் ஐ.விஜயராஜன் ஆகியோர் வீரமாமுனிவரது தமிழ்த்தொண்டு குறித்து பேசினர்.
  பேராசிரியர் ந.ம.அருள்பிரகாசம், வீரமாமுனிவரின் தமிழ்த்தொண்டு குறித்து சிறப்புரையாற்றி மலரஞ்சலி செலுத்தினார். வீரமாமுனிவர் அறக்கட்டளை செயலர் ஆசிரியர் எம்.ஜெயராஜ் வரவேற்றார். விழா ஏற்பாடுகளை கலை இலக்கியச் செயலர் ஜோ.ஸ்டேன்லி விக்டர், இணைச்செயலர் எஸ்.ராஜா,  ஜோசப் ரத்தினசாமி ஆகியோர் செய்திருந்தனர். 
 பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீரமாமுனிவர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மதுரையில் உள்ள வீரமாமுனிவரின் சிலையின் கீழ் உள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்ட பெயரை சரியாக பொறிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆசிரியர் பிரபு நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com