குழந்தைக்கு கட்டாய பயணச்சீட்டு: பேருந்து நடத்துநருக்கு அபராதம்

3 வயது நிரம்பாத குழந்தைக்கு பயணச்சீட்டு எடுக்க வற்புறுத்திய அரசுப் பேருந்து நடத்துநருக்கு மதுரை நுகர்வோர்

3 வயது நிரம்பாத குழந்தைக்கு பயணச்சீட்டு எடுக்க வற்புறுத்திய அரசுப் பேருந்து நடத்துநருக்கு மதுரை நுகர்வோர் நீதிமன்றம் ரூ. 8 ஆயிரம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை  தீர்ப்பளித்தது.
     மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள கவணம்பட்டியை சேர்ந்தவர் சோலைராஜா (41). இவர்  உசிலம்பட்டி நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 28 ஆம் தேதி, உசிலம்பட்டியிலிருந்து திருமங்கலம் செல்லும்  அரசுப் பேருந்தில் இரண்டரை வயது மகளுடன் பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்து நடத்துநர் பாலகிருஷ்ணன், அக்குழந்தைக்கு பயணச்சீட்டு வாங்கவேண்டுமென  வற்புறுத்தியுள்ளார். 3 வயது ஆகாத குழந்தைக்கு பயணச்சீட்டு  எப்படி எடுக்க முடியும் என  சோலைராஜா கேட்டுள்ளார். அதன்பின்னர் அரை கட்டண சீட்டு  கொடுங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் நடத்துநர் முழு கட்டண சீட்டு வாங்க வேண்டும் என வற்புறுத்தி ரூ. 8-க்கான பயணச்சீட்டை  கொடுத்துள்ளார்.  
  இதனால் மன உளைச்சல் அடைந்த சோலைராஜா, அரசு போக்குவரத்துக்கழக  மதுரை மண்டல மேலாளர், உசிலம்பட்டி பணிமனை மேலாளர், நடத்துநர் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக மதுரை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கில், உரிய வயதை அடையாத சிறுமிக்கு பயணச்சீட்டு வழங்கியதற்காக ரூ.5 ஆயிரம் அபராதம், வழக்கு செலவுக்கு ரூ.3ஆயிரம் என மொத்தம் ரூ.8ஆயிரத்து 8 பேருந்து நடத்துநருக்கு அபராதம் விதித்து  நுகர்வோர் நீதிமன்ற தலைவர் பாலச்சந்திரகுமார், உறுப்பினர் மறைக்காமலை ஆகியோர்  தீர்ப்பளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com