ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையம் அக்.24-இல் மதுரையில் கருத்துக்கேட்பு

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறை தொடர்பாக பொதுமக்களிடம் ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறை தொடர்பாக பொதுமக்களிடம் ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையக் குழு மதுரையில் அக்டோபர் 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை கருத்துக் கேட்க உள்ளது.
 ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி தமிழகம் முழுவதும் 2017-இல் தொடர் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில் வன்முறை நிகழ்ந்தது. இந்த சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
விசாரணையின் ஒரு பகுதியாக, ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட சட்டம் ஒழுங்குப்பிரச்னை தொடர்பாக விசாரணை ஆணையக்குழு பொதுமக்களிடம் கருத்துக் கேட்க உள்ளது. மதுரையில் அரசினர் விருந்தினர் மாளிகையில் அக்டோபர் 24 தேதி முதல் 26 ஆம் தேதி வரை பொதுமக்கள் விசாரணை ஆணையத் தலைவரை நேரில் சந்தித்து மனுக்கள் அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com