பள்ளி அருகில் மதுபானக் கடை: பூட்டு போட்டு பெண்கள் போராட்டம்

மதுரை டோக் நகர் பகுதியில் பள்ளி மற்றும் குடியிருப்புகளுக்கு இடையே புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானக் கடைக்கு பூட்டுபோட்டு பெண்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர். 

மதுரை டோக் நகர் பகுதியில் பள்ளி மற்றும் குடியிருப்புகளுக்கு இடையே புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானக் கடைக்கு பூட்டுபோட்டு பெண்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர். 
மதுரை கோச்சடை டோக் நகர் பகுதியில் மதுபான கடை வியாழக்கிழமை புதிதாக திறக்கப்பட்டது. குடியிருப்புகள் நிறைந்த டோக் நகர் பகுதியில் புதிதாக மதுபான கடை திறக்கப்பட்டது அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
மேலும் மதுபான கடைக்கு அடுத்து தனியார் மருத்துவமனை, ரத்த பரிசோதனைக்கூடம் ஆகியவை இயங்கி வருகின்றன. மேலும் மதுபான கடைக்கு எதிரே 100 மீட்டர் தொலைவுக்குள்ளாகவே தனியார் மெட்ரிக் பள்ளியும், கோயிலும் உள்ளன.
 மதுபான கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மதிமுக ஆகியவற்றின் சார்பில் மதுபான கடையை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. 
இதையடுத்து மதுபான கடை முன்பாக வெள்ளிக்கிழமை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் பகல் 12 மணியளவில் மதுபான கடை திறக்கப்பட்டதை அடுத்து கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி கலையரசி தலைமையில் பெண்கள் மதுபான கடைக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும்  டாஸ்மாக் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்குச்சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கால அவகாசம் வழங்கினால் கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதை ஏற்க மறுத்த கட்சியினர் மதுபான கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி கணேசன், மதிமுக நிர்வாகி நாகராஜ் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com