மேலூரில் விநாயகர் சிலை ஊர்வலம்
By DIN | Published on : 16th September 2018 05:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
இந்து முன்னணி சார்பில், மேலூரில் சனிக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில், 24 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
மேலூர் நகர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் விநாயகர் சிலைகள் பலவேறு இடங்களில் நிறுவப்பட்டிருந்தன. சனிக்கிழமை பிற்பகலில் அனைத்து சிலைகளும் வாகனங்களில் ஏற்றி, மேலூர் காமாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கோயிலுக்கு எடுத்து வரப்பட்டன.
பின்னர், அங்கிருந்து புறப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலத்தை, வர்த்தகர் செல்வமணி தொடக்கிவைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்த ஊர்வலமானது, மண்கட்டித் தெப்பக்குளத்தை வந்தடைந்தது. அங்கு அனைத்துச் சிலைகளும் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தையொட்டி, மேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.