இசை குறுந்தகடு வெளியீட்டு விழா
By DIN | Published On : 01st April 2019 10:05 AM | Last Updated : 01st April 2019 10:05 AM | அ+அ அ- |

மதுரையில் ஓய்வுபெற்ற அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி பேராசிரியை உமா சண்முகையா இசையமைத்து பாடிய திருப்பாவை-திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளி எழுச்சி இசை குறுந்தகடு வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின்
ஓய்வுபெற்ற முதுநிலை கண்காணிப்பாளர் வி. சுந்தரமகாலிங்கம் இசை குறுந்தகட்டை
வெளியிட்டார். அதை, மகாத்மா பள்ளிகள் குழுமத்தின் தாளாளர் ப.பிரேமலதா பெற்றுக்கொண்டார்.
இசை குறுந்தகட்டை வெளியிட்ட உமா சண்முகையாவை பேராசிரியர் இரா. மோகன், மகாத்மா பள்ளிகள் குழுமத்தின் தலைவர் ரெ. பன்னீர்செல்வம், பார்க் பிளாஸா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் கே. பி. நவநீதகிருஷ்ணன், நான்காம் தமிழ்ச் சங்க செயலர் மாரியப்பன் முரளி, மதுரை காமராஜர் பல்கலைக் கழக முன்னாள் பதிவாளர் நா. அழகப்பன், திருவனந்தபுரம் இந்திய அறிவியல் கழக முன்னாள் இயக்குநர் ராமகிருஷ்ணன், முனைவர் சண்முகையா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.