Enable Javscript for better performance
மதுவிலக்கினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய திட்டம் ஏதும் உள்ளதா?- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மதுவிலக்கினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய திட்டம் ஏதும் உள்ளதா?

    By DIN  |   Published On : 09th April 2019 01:29 AM  |   Last Updated : 09th April 2019 01:29 AM  |  அ+அ அ-  |  

    மதுவிலக்கினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய திட்டம் ஏதும் உள்ளதா என தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
    தஞ்சையைச் சேர்ந்த மகேந்திரன் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கோயில், கல்வி நிலையங்கள் உள்ள பகுதியில் இருந்து 100 மீட்டருக்குள் மதுபானக் (டாஸ்மாக்) கடை அமைக்கக் கூடாது என்ற விதி உள்ளது. இந்நிலையில், தஞ்சை பள்ளியக்கரஹாரம் பேருந்து நிலையம் அருகே அரசு மதுபானக் கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. அப்பகுதியில் பேருந்து நிலையம், மாநகராட்சி  பள்ளி, விட்டல் மெட்ரிகுலேசன் பள்ளி, பெருமாள் கோயில் ஆகியன அமைந்துள்ளன. அங்கு மதுபானக் கடை அமைந்தால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக அமையும். எனவே பள்ளியக்கரஹாரம் பேருந்து நிலையம் அருகே மதுபானக் கடை அமைக்க தடைவிதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். 
    இதேபோல அரசு மதுபானக் (டாஸ்மாக்) கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யபட்டிருந்தன.
    இந்த மனு  நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக டாஸ்மாக்கின் நிர்வாக இயக்குனர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 
    அதில் கடந்த 2016 ஆம் ஆண்டு 500 கடைகளும், 2017 ஆம்  ஆண்டு 500 கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 500 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2004 ஆம் ஆண்டு மொத்தம் 7,896 மதுபானக் கடைகள் இருந்தன. 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி 6,715 கடைகளாகவும், நிகழாண்டு  நிலவரப்படி 5,239 கடைகளாகவும் குறைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது.
    இதையடுத்து நீதிபதிகள், டாஸ்மாக்கின் நிர்வாக இயக்குனர் தரப்பில் தாக்கல் செய்துள்ள அறிக்கையை ஏற்க முடியாது. இதற்கு தமிழக அரசு தரப்பில் உரிய பதிலளிக்க வேண்டும். மதுவிலக்கினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய தமிழக அரசிடம் திட்டம் ஏதும் உள்ளதா என கேள்வி எழுப்பினர். மேலும் அரசு எடுக்கும் முடிவுகள் மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp