Enable Javscript for better performance
உயர்கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களுக்கே மாணவர்கள் வாக்கு: உயர்கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறு- Dinamani

சுடச்சுட

    

    உயர்கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களுக்கே மாணவர்கள் வாக்கு: உயர்கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 11th April 2019 09:19 AM  |   அ+அ அ-   |    |  

    தமிழகத்தில் உயர்கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேட்பாளர்களுக்கே மாணவ வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்று தமிழக உயர் கல்வி பாதுகாப்பு இயக்கம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
    மதுரையில் தமிழக உயர்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முரளி, பேராசிரியர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:
    மக்களவைத் தேர்தலையொட்டி கட்சிகளின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் எந்தக் கட்சியும் உயர்கல்வி குறித்து தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வில்லை. தமிழகத்தில் தற்போது கணிசமான அளவில் மாணவ வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்காக எந்த கட்சியும் வாக்குறுதிகள் அளிக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக உயர்கல்வித்துறை சீரழிந்துள்ளது.  பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு ஜனநாயகமான சூழல்கள் இல்லை.
     கடந்த காலங்களில் தமிழகத்தில் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்விநிலையங்களில் இருந்து பல தலைவர்கள் உருவாகி உள்ளனர். ஆனால் இன்று கல்விநிலைய வளாகங்களில் மாணவர் போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன. மாணவர்கள் அரசியல் பற்றி அறிந்துகொள்ள கல்வியை ஜனநாயகப்படுத்த வேண்டும்.
     கல்விநிலையங்களில் மாணவர் பேரவைத்தேர்தல்கள் நடத்த வேண்டும். மேலும் தற்போதுள்ள மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளாக உயர்கல்வித்துறை மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளது. மேலும் பல்கலைக்கழக மானியக்குழுவை கலைக்கும் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது.  இதற்கு எதிராக கட்சிகள் குரல் கொடுப்பதுடன் உயர்கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களை  தேர்தல் அறிக்கையில் தெரிவிக்க வேண்டும். கட்சிகளின் வேட்பாளர்கள் உயர்கல்வி குறித்த புரிதலுடன் அதன் வளர்ச்சிக்கு பாடுபடுபவராக இருக்க வேண்டும். மேலும் பல்கலைக்கழகங்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்துள்ளன.   மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளை தவறான பாதைக்கு தூண்டிய வழக்கில் நிர்மலா தேவி உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் உயர் அதிகாரிகள் தொடர்பு குறித்து வெளிவரை வில்லை. தமிழக ஆளுநர் நியமித்த சந்தானம் குழு அறிக்கையும் வெளிவரவில்லை. இதுதொடர்பாக மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் தங்களது கருத்தை மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும். 
    மேலும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் மிகக்குறைந்த ஊதியத்தில் கொத்தடிமைகள் போல நடத்தப்படும் ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை பெற்றுத்தர வேட்பாளர்கள் உறுதிமொழி அளிக்கவேண்டும். அனைத்துக் கல்லூரிகளிலும் ஒரே விதமாக கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கல்வி நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க மக்கள் பங்கேற்கும் சமூக தணிக்கைக்குழுவை அமைக்க தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும்.
     எனவே உயர் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேட்பாளர்களுக்கு மட்டுமே மாணவர்கள் வாக்களிக்க வேண்டும் என்றனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp