தனியார் நிறுவனத்தில் ரூ.1.46 கோடி மோசடி: பெண் கைது

தனியார் நிறுவனத்தில் ரூ.1.46 கோடி மோசடி செய்த பெண் கணக்காளரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

தனியார் நிறுவனத்தில் ரூ.1.46 கோடி மோசடி செய்த பெண் கணக்காளரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
 மதுரை எல்லீஸ் நகரில் தனியார் பூச்சிக் கொல்லி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பெத்தானியாபுரம் நாகு நகரைச் சேர்ந்த தெய்வேந்திரன் மனைவி சத்யபிரியா (38) கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். நிறுவனத்தின் கணக்குகளை ஆய்வு மேற்கொண்டபோது, கணக்கில் ரூ.1.46 கோடி மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்தது. 
இதுகுறித்து சத்யபிரியாவிடம் கேட்ட போது, அவர் உரிய பதிலளிக்கவில்லை. மேலும், அவரது கணவர் தெய்வேந்திரன், உறவினர் சித்ரா உள்ளிட்ட சிலரும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இதனையடுத்து நிறுவனத்தின் தலைமை அதிகாரி பரத்ராஜ், மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு எஸ்.எஸ். காலனி போலீஸாரிடம் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சத்யபிரியாவை வியாழக்கிழமை கைது செய்தனர். மேலும், அவரது கணவர், உறவினர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com