மத்திய அரசின் விருதுகளுக்கு விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 14th April 2019 05:38 AM | Last Updated : 14th April 2019 05:38 AM | அ+அ அ- |

மத்திய அரசின் விருதுகளுக்கு விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அ. மாலதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: விளையாட்டுத் துறையில் உலக அளவில் சாதனை செய்து நாட்டிற்கு புகழையும், நற்பெயரையும் பெற்று தரும் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டுத் தொடர்புடையவர்கள் ஆகியோருக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, தயான் சந்த் விருது, அர்ஜூனா விருது, ராஷ்ட்ரிய கேல் புரோட்ஸஹான் விருது, துரோணாச்சார்யா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
2019-ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கு மதுரை மாவட்டத்தில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தள முகவரியின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் விருதின் பெயரை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அரசு மகாத்மா காந்தியடிகளின் 125-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு காந்தி சமாதான விருது 1995-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இந்த விருதிற்காக தேர்வு செய்யப்படுபவருக்கு பரிசாக ரூ.1 கோடி வழங்கப்படும். இந்த விருது மனித சமுதாய நல்வாழ்க்கைக்காகவும், சமுக நீதி மற்றும் நல்லிணக்கத்திற்காகவும் தனி நபர் மற்றும் நிறுவனத்திற்கும் வழங்கப்படுகிறது.
இந்த விருதைப் பெற குறைந்தது 10 ஆண்டுகளாக தொடர்ந்து தொண்டாற்றியிருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் ரரர.ஐசஈஐஅசஇமகபமதஉ.சஐஇ.ஐச என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.