சுடச்சுட

  

  பாஜகவினர் கூறும் காவிரி- கோதாவரி நதிகள் இணைப்புத்  திட்டம் சாத்தியமான ஒன்றல்ல என முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
  மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மேலூரில் ராஜகண்ணப்பன் திங்கள்கிழமை பேசியது:
  நான் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த காலத்திலேயே காவிரி-கோதாவரி நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து பேசப்பட்டது. ஆனால் செயல்படுத்தப்படவில்லை. தற்போது பாஜக தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றப் போவதாக குறிப்பிட்டுள்ளது. இத்திட்டம் சாத்தியமான திட்டம் அல்ல.  உலக நாடுகளுக்கிடையே இன்னும் 20 ஆண்டுகளில் தண்ணீருக்காக போர் நிகழும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பாஜக அறிவித்துள்ள நதிகள் இணைப்புத் திட்டம் எப்படி சாத்தியம்.
  பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேசலாம். "ஒன்றே கடவுள் ஒருவனே தேவன்' என அண்ணா கூறிவிட்டார். இதை துஷ்பிரச்சாரம் செய்கிறனர். மத்தியில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது என பலரும் கூறுகின்றனர். இந்நிலையில் பாஜக சாத்தியம் இல்லாத திட்டங்களை கூறி ஏமாற்றி வருகிறது என்றார்.
  அவருடன் மதுரை மாவட்ட திமுக செயலர் பி.மூர்த்தி, மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் உடன் சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai