சுடச்சுட

  

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் இறுதிக்கட்ட பிரசாரம்

  By DIN  |   Published on : 16th April 2019 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மதுரை மக்களவைத்தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் திங்கள்கிழமை இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.
  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் திங்கள்கிழமை டி.வி.எஸ்.நகர் பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் பீ.பீ.குளம்,  மருதுபாண்டியர் நகர்,  கிருஷ்ணாபுரம் தெருக்கள், பீ.பீ.குளம் சந்திப்பு, இந்திராநகர், சொக்கிகுளம், அண்ணாநகர், லேடி டோக் சாலை,  பி.டி.ஆர். பிரதான சாலை, ரயில்வே காலனி ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, செல்லூர் மார்க்கெட்,  அகிம்சாபுரம், பாலம் ஸ்டேஷன் ரோடு, மேலத்தோப்பு,  சன்னதி தெரு, கீழத்தோப்பு, ஆழ்வார்புரம், வைகை வடகரை,  அரசு மருத்துவமனை வடக்கு பகுதி, புளியந்தோப்பு,  ஆர்.ஆர்.மண்டபம், மதிச்சியம் காவல் நிலையம்,  சப்பாணிக்கோயில் தெரு, கல் மண்டபம், அரவிந்த் கண்  மருத்துவமனை,  மாவட்ட ஆட்சியர் அலுவலக ரோடு - பி.டி.காலனி , இந்திரா நகர், சதாசிவம் நகர், செளராஷ்டிராபுரம், தீர்த்தக்காடு, வண்டியூர், கபீர் நகர், ஜே.ஜே.நகர், வளர்நகர், உத்தங்குடி, உலகநேரி உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்குகள் சேகரித்தார்.
  பிரசாரத்தில் திமுக மதுரை மாநகர் பொறுப்புக்குழுத் தலைவர் கோ.தளபதி, முன்னாள் மேயர் பெ.குழந்தைவேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் ரா.விஜயராஜன், மதிமுக மாவட்டச் செயலாளர் பொடா மு.பூமிநாதன், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் வி.கார்த்திகேயன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் ப.கதிரவன்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் பா.காளிதாஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai