சுடச்சுட

    

    அதிமுகவுக்கு  ஆதரவாக செளராஷ்டிர முன்னேற்றக் கழகம் வாக்குச் சேகரிப்பு

    By DIN  |   Published on : 17th April 2019 06:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக செளராஷ்டிர முன்னேற்றக் கழகத்தினர் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தனர்.
    மதுரை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் தலைமையில் சௌராஷ்டிர முன்னேற்றக் கழக தலைவர் வி.ஜி.ராம்தாஸ், முன்னாள் எம்பி ஏ.ஜி.எஸ்.ராம்பாபு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஓ.எஸ்.அமர்நாத், செளராஷ்டிர கிளப் செயலர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் கீழவாசல் அரசமரம் பிள்ளையார் கோயில் பகுதியில் தொடங்கி சௌராஷ்டிரா பள்ளி, மாரியம்மன் தெப்பக்குளம், தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, தெற்கு கிருஷ்ணன் கோயில் வீதி, தெற்குமாசி வீதி, சிந்தாமணி, அண்ணா நகர், வண்டியூர், சக்கிமங்கலம் உள்ளிட்ட பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தனர். 
    அண்ணா நகர், வண்டியூர் பகுதிகளில் வாக்குச் சேகரிக்கும்போது மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யனும் கலந்து கொண்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai