சுடச்சுட

    

    கள்ளழகர் செல்லும் இடத்தை அறிந்து கொள்ள செயலி அறிமுகம்

    By DIN  |   Published on : 17th April 2019 06:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருள்மிகு கள்ளழகர் செல்லும் இடத்தை தெரிந்துக் கொள்ள மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் செயலி செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
    இதுகுறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் வெளியிட்ட செய்தி: 
    சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதை கருத்தில் கொண்டு மாவட்ட காவல்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மதுரை காவலன் செயலியில் T​R​A​CK AL​A​G​A​R என்ற லிங்க் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    இந்த வசதி மூலம் அருள்மிகு கள்ளழகர், அழகர் கோயிலில் இருந்து புறப்படுவது முதல் எந்த வழியாகச் செல்கிறார் என்பதை செல்லிடப்பேசியில் மதுரை காவலன் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள  T​R​A​CK AL​A​G​A​R என்ற லிங்க் மூலம் வரும் வரை படத்தில் தெரிந்துக் கொள்ளலாம். 
    மேலும், கள்ளழகர் புறப்பாடு நிகழ்ச்சிகளை மதுரை காவலன், மதுரை மாவட்ட காவல் யூடியூப் இணையதளத்தில்  தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai