சுடச்சுட

  

  மதுரை மாவட்டத்தில் தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் என 13 ஆயிரத்து 545 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
  வாக்காளர்கள்: மதுரை மக்களவைத் தொகுதியில் 15  லட்சத்து 38 ஆயிரத்து 133 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்து 57 ஆயிரத்து 900 பேர் ஆண்கள். 7 லட்சத்து 80 ஆயிரத்து 137 பேர் பெண்கள். 96 பேர் மூன்றாம் பாலினத்தவர். மதுரை மக்களவைக்கு உள்பட்ட மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்திய தொகுதி, மதுரை மேற்கு ஆகிய தொகுதிகளில் மொத்தம் 1,574 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
  27 வேட்பாளர்கள்:  மதுரை மக்களவைத் தொகுதியில் ஆ. தவமணி (பகுஜன் சமாஜ்-யானை), வி.வி.ஆர்.ராஜ்சத்யன் (அதிமுக-இரட்டை இலை), சு.வெங்கேடசன் (மா.கம்யூ-சுத்தி, அரிவாள், நட்சத்திரம்), ப.அழகர் ( தேசிய மக்கள் சக்தி கட்சி - கால்பந்து), ம.அழகர் (மநீம- மின்கல விளக்கு), ஜெ.பாண்டியம்மாள் (நாம் தமிழர் - கரும்புவிவசாயி), நா.மாயழகன் (தமிழ்நாடு இளைஞர் கட்சி - மோதிரம்), சுயேச்சை வேட்பாளர்கள் பா.அண்ணாதுரை (மோதிரம்), த.ராமசாமி (தலைக்கவசம்), சு.கோபாலகிருஷ்ணன் (பானை), மீ.கோபாலகிருஷ்ணன் (தென்னந்தோப்பு), வே.சண்முகம் (கடாய்), கா.டேவிட் அண்ணாதுரை -அமமுக (பரிசுப் பெட்டி), ப.தர்மர் (அலமாரி), கா.நாகஜோதி (வாயு அடுப்பு), சே.பசும்பொன் பாண்டியன் (பிரஷர் குக்கர்), தி.பாலச்சந்திரன் (ஆட்டோ ரிக் ஷா), ம.பால்பாண்டி (உறை), பிரிட்டோ ஜெய்சிங் (வளையல்கள்), க.பூமிநாதன் (வெட்டுகிற சாதனம்), க.பூமிராஜன் (கிரிக்கெட் மட்டை), த.முத்துக்குமார் (தொப்பி), ந.மோகன் (டிராக்டர் இயக்கும் உழவன்), கே.கே.ரமேஷ் (பலூன்), மா.வெங்கடேசன் (வைரம்), சு.வெங்கேடஸ்வரன் (அழைப்பு மணி), செள.சோபனா (சாவி).
  தேர்தல் பணியில் 13 ஆயிரம் பேர்: மதுரை மாவட்டத்தில் தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் என 13 ஆயிரத்து 545 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். 
  இதில் மதுரை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகளில் மட்டும்  6 ஆயிரத்து 901 பேர்  பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கான வாக்குச்சாவடிகள் பேரவைத் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்து அதற்கான உத்தரவுகள் அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் புதன்கிழமை வழங்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து புதன்கிழமை மாலையிலேயே வாக்குச்சாவடிகளில் பணியேற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருள்கள் தனி வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை காலை தொடங்குகிறது.
  மதுரை மக்களவைத் தொகுதிக்கு 126 வாகனங்களும்,  விருதுநகர் மக்களவைக்கு உள்பட்ட திருமங்கலம், திருப்பரங்குன்றம் மற்றும் தேனி மக்களவைக்கு உள்பட்ட சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிகளுக்கு 143 வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 
  இந்த வாகனம் எங்கு செல்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கான ஜிபிஎஸ் கருவிகள் செவ்வாய்க்கிழமை பொருத்தப்பட்டன. இவற்றை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் ஆய்வு செய்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai