Enable Javscript for better performance
மதுரை நகரில் 4 நாள்களில் 2,790 டன் குப்பைகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை நகரில் 4 நாள்களில் 2,790 டன் குப்பைகள் அகற்றம்

    By DIN  |   Published on : 21st April 2019 03:15 AM  |   அ+அ அ-   |    |  


    சித்திரைத் திருவிழாவையொட்டி மதுரை நகரில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 4 நாள்களில் 2790 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
    சித்திரைத் திருவிழாவினை முன்னிட்டு மதுரை மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட மக்களும் மதுரையில் முகாமிட்டுள்ளனர். மதுரை மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள்  மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, கடச்சனேந்தல் முதல் வண்டியூர் வரை 78 நடமாடும் கழிப்பறைகளும், 38 இடங்களில் தற்காலிக குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதாரப்பணிகளுக்காக 100 டன் பிளீச்சிங் பவுடர்,  250 டன் சுண்ணாம்பு பவுடர்,  200 லிட்டர் பினாயில் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதாலும்,  ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதாலும் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதற்காக 30 இளநிலை பொறியாளர்கள் தலைமையில் 1500 சுகாதாரப் பணியாளர்களும், 14 டிராக்டர்களும், 12 டம்பர் பிளேசர்களும், 1 காம்பேக்டர் வாகனமும்,  4 கொசு மருந்து பரப்பு வாகனமும் ஈடுபடுத்தப்பட்டு தூய்மைப்பணி மற்றும் சுகாதாரப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கடந்த 4 நாள்களில் 2790 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 400 டன்குப்பை கூடுதல் ஆகும்.  
    அருள்மிகு கள்ளழகர் அழகர்மலைக்கு திரும்பி செல்லும் வரை இப்பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வசதிக்காக ஆழ்வார்புரம் முதல் வண்டியூர் வரையுள்ள முக்கிய பகுதிகளில் மருத்துவர்,  செவிலியர் உள்பட 64 நபர்கள் கொண்ட 6 நடமாடும் மருத்துவக் குழுக்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp