காலமானார் எஸ்.நரஹரி
By DIN | Published On : 21st April 2019 03:24 AM | Last Updated : 21st April 2019 03:24 AM | அ+அ அ- |

கரூர் வைஸ்யா வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற மதுரை எச்.எம்.எஸ். காலனியை சேர்ந்த எஸ். நரஹரி (87) வெள்ளிக்கிழமை நள்ளிரவில் காலமானார்.
இவர், தமிழ்நாடு வங்கி ஊழியர் கூட்டமைப்பு, மதுரைராமநாதபுரம் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம், கரூர் வைஸ்யா வங்கி ஊழியர் சங்கம் ஆகியவற்றின் தலைவராகப் பதவி வகித்துள்ளார்.
இவர், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் மதுரை அலுவலக முதுநிலை மேலாளர் நா. ரகுசுப்பிரமணியனின் பெரியப்பா ஆவார். இவரது இறுதிச் சடங்கு, தத்தனேரி மயானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தொடர்புக்கு: 9840304050, 9043089653.