வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு
By DIN | Published On : 21st April 2019 03:13 AM | Last Updated : 21st April 2019 03:13 AM | அ+அ அ- |

மதுரையில் வெள்ளிக்கிழமை வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.
மதுரை மாகாளிப்பட்டி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர், கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டைப் பூட்டிவிட்டு, சித்திரைத் திருவிழா தேரோட்டம் பார்க்கச் சென்றுவிட்டார். இரவு வீடு திரும்பிய இவர், கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டுள்ளார்.
வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ. 19 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து அவர் தெற்குவாசல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்று சோதனை நடத்தினர். மேலும், போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.