மேலூரில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை
By DIN | Published On : 23rd April 2019 07:36 AM | Last Updated : 23rd April 2019 07:36 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் மேலூரில் திங்கள்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மேலூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் பலத்த மழை பெய்தது. ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளமாக சென்றது. மேலும் மழையுடன் சூறாவளிக்காற்றும் வீசியதால் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்தன. மேலும் சாலைகளிலும் பல மரங்கள் விழுந்தன. இதனால் மேலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாலை 5 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் இரவு வரை சீராகவில்லை. பலத்த மழையால் மேலூரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. மேலும் ஓடைகளில் நீர்வரத்தும் ஏற்பட்டது.