பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி

மதுரையில் ரூட்செட் தொண்டு நிறுவனம் சார்பில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மதுரையில் ரூட்செட் தொண்டு நிறுவனம் சார்பில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மதுரை பெருங்குடியில் இயங்கி வரும் ரூட்செட் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பெண்களுக்கான 1 மாத இலவச தையல் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. இதில், பங்கேற்கும் பெண்களுக்கு பயிற்சி, உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படுகிறது. 
பயிற்சியில் தேர்ச்சி பெறும் பெண்களுக்கு சான்றிதழும், தையல் தொழில் நடத்துவதற்கான வங்கிக்கடன் ஏற்பாடுகளும் செய்துதரப்படும். 
பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்பும் பெண்கள்  பெயர், வயது கல்வித்தகுதி, விலாசம் ஆகியவற்றுடன் இயக்குநர் ரூட்செட் பயிற்சி நிலையம், விமான நிலையச் சாலை, பெருங்குடி, மதுரை- 625022 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். ரூட்செட் மைய நிர்வாகிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com