Enable Javscript for better performance
தமுக்கம் வாகன நிறுத்துமிடத்தில் கூடுதல் கட்டணம் வசூல்: அதிகாரி நடவடிக்கை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தமுக்கம் வாகன நிறுத்துமிடத்தில் கூடுதல் கட்டணம் வசூல்: அதிகாரி நடவடிக்கை

    By DIN  |   Published On : 29th April 2019 09:50 AM  |   Last Updated : 29th April 2019 09:50 AM  |  அ+அ அ-  |  

    மதுரை தமுக்கம் பொருள்காட்சி வாகன நிறுத்துமிடத்தில் வாகன ஓட்டிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதையடுத்து கட்டணச் சீட்டுகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
    மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு சித்திரைப் பொருள்காட்சி நடந்து வருகிறது. இதில் பொருள்காட்சியை காண வருவோரின் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை நிறுத்த தமுக்கம் சாலையில் வாகன நிறுத்துமிடம் உள்ளது. மேலும் தமுக்கம் சாலையிலும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. 
    இங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5 கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று விதிகளில் உள்ளது. ஆனால் பொருள்காட்சிக்கு வரும் வாகன ஓட்டிகளிடம் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.5-க்குப் பதிலாக, ரூ.10 வசூலிக்கப்படுகிறது. மேலும் கட்டணச்சீட்டில் தொகை குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதியை மையால் அழித்து ரூ.10 வசூலிக்கப்படுகிறது. 
    வாகன நிறுத்துமிடத்தில் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படாமல் சாலையில் வாகனங்களை நிறுத்துபவர்களிடமும் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணம் தொடர்பாக தட்டிக்கேட்கும் வாகன ஓட்டிகளை கட்டணம் வசூலிப்பவர்கள் மிரட்டி அனுப்புவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
    இதையடுத்து கட்டணம் வசூலிக்குமிடத்துக்கு மாநகராட்சி வருவாய்ப்பிரிவு உதவி ஆணையர் ரெங்கராஜன், அங்கு சென்று தொகை அழிக்கப்பட்டிருந்த கட்டணச்சீட்டுகளை பறிமுதல் செய்தார். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பாக ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று அவர் தெரிவித்தார்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp