செந்தமிழ் கல்லூரியில் கண் தான விழிப்புணர்வு முகாம்

மதுரை செந்தமிழ் கல்லூரியில் கண் தான விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுரை செந்தமிழ் கல்லூரியில் கண் தான விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   மதுரை செந்தமிழ் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம் ஆகியன இணைந்து கல்லூரி வைரவிழா அரங்கில் இந்த முகாமை நடத்தின. நிகழ்வுக்கு நான்காம் தமிழ்ச் சங்கச் செயலர் ச.மாரியப்ப முரளி தலைமை வகித்தார். சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முன்னாள் முதல்வர் பாஸ்கர் அறிமுகவுரையாற்றினார்.  சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்க பட்டயத் தலைவர் ஜே.கணேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது: நாட்டில் கருவிழி பாதிப்பால் 68 லட்சம் பேர் பார்வை இழந்துள்ளனர். ஒருவர் கண் தானம் வழங்கினால் 4 பேருக்கு பார்வை கிடைக்கும். கண் தானத்தில் தமிழ்நாடு 2 ஆம் இடத்தில் உள்ளது என்றார். 
  நிகழ்ச்சியில் கண் தானம் பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது. மேலும் கண்தானம் குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கப்பட்டது. இதில் துணை முதல்வர் சுப்புலட்சுமி உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். முன்னதாக கல்லூரி முதல்வர் கி.வேணுகா வரவேற்றார். நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் நேருஜி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com