இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் உழவாரப்பணி

தென் கயிலாய பக்திப் பேரவை சார்பில் மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் உழவாரப்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென் கயிலாய பக்திப் பேரவை சார்பில் மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் உழவாரப்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தென் கயிலாய பக்திப்பேரவை தமிழகத்தில் உள்ள தொன்மையான கோயில்களில் உழவாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அதிகம் கவனிக்கப்படாமல் உள்ள சிறு கோயில்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதுவரை 45-க்கும் மேற்பட்ட கோயில்களில் உழவாரப் பணியை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் உழவாரப்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் காலை 9 மணிக்குத் தொடங்கிய உழவாரப் பணியில் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள், சிவாங்கா சாதகர்கள், பக்தர்கள்  மற்றும் கோயில் நிர்வாகத்தினர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உழவாரப்பணியில் கோயிலின் உள் மற்றும் வெளிப் பிரகாரங்கள், தூண்கள், சன்னதிகள் சுத்தம் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com