தங்கத்தின் எடைக்கு மட்டும் ஜிஎஸ்டி விதிக்க வேண்டும்: மதுரை நுகர்வோர் பாதுகாப்பு மையம் தீர்மானம்

தங்க நகை வணிகத்தில் தங்கத்தின் எடைக்கு மட்டும் ஜிஎஸ்டி விதிக்க வேண்டும். சேதாரத்திற்கும் சேர்த்து

தங்க நகை வணிகத்தில் தங்கத்தின் எடைக்கு மட்டும் ஜிஎஸ்டி விதிக்க வேண்டும். சேதாரத்திற்கும் சேர்த்து ஜிஎஸ்டி வரி வசூலிக்கக் கூடாது என மதுரை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரையில் மதுரை நுகர்வோர் பாதுகாப்பு மையம் 2018-19 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து தரப்பு மாணவர்களும் மருத்துவ கல்விப் பெற நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். 
மதுரையில் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மதுரை மாநகராட்சி குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும். 
சாலைகளின் நடுவே தடுப்புகள் வைக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். 
நாட்டில் அனைத்து நதிகளையும் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய மோட்டார் வாகனச் சட்டம் மக்களை பாதிக்கும் வகையில் உள்ளது. 
அதை ரத்து செய்ய வேண்டும். தங்க நகை வணிகத்தில் தங்கத்தின் எடைக்கு மட்டும் ஜிஎஸ்டி விதிக்க வேண்டும். சேதாரத்திற்கும் சேர்த்து ஜிஎஸ்டி வரி வசூலிக்கக் கூடாது. கேரளாவில் வீணாக கடலில் கலக்கும் 200 டிஎம்சி நீரை கல்லாறு, வைப்பாற்றில் இணைக்க வேண்டும். வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கு 2 சதவீத கூடுதல் வட்டி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
மதுரை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் முதன்மை ஆலோசகர் புகழகிரி, பார்சூன் பாண்டியன் ஹோட்டல் நிர்வாக இயக்குநர் பி.சி.எம்.சந்தானம், தேசிய நெடுஞ்சாலை துறை மதுரை வட்ட கண்காணிப்பு பொறியாளர் வி.கிருஷ்ணசாமி, தலைவர் ஏ.டி.ஜெகதீஸ்வர், பொதுச்செயலர் கண.முனியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com